வணக்கம்
ஒட்டாவா கார்ல்டன் மாவட்டப் பாடசாலைத் திணைக்களத்தின் ஆதரவில், ஒட்டாவா வாழ் தமிழ்ப் பிள்ளைகளுக்காக “கிரீன்பாங்க்” பாடசாலையில் தமிழ் வகுப்புக்கள் நடைபெறுகின்றன.4 முதல் 14 வயது வரையான பிள்ளைகள் இங்கே தமிழ் பயில்கிறார்கள். ஒட்டாவா கார்ல்டன் மாவட்டப் பாடசாலைத் திணைக்களத்தின் கல்வித் திட்டத்திற்கமைய அவர்களால் பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர்கள் இந்த மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கின்றார்கள். தற்பொழுது 100க்கு மேற்பட்ட பிள்ளைகள் இங்கே தமிழ் பயில்கிறார்கள். இவர்களுக்குத் தமிழ் மொழியும் பண்பாடும் இங்கே கற்பிக்கப்படுகின்றன.
சனிக்கிழமை வகுப்புகள்
வகுப்பு நேரம்: செப்டம்பர் முதல் யூன் வரை சனிக்கிழமை காலை 9:15 - 11:45இடம்: நொக்ஸ்டேல் பாடசாலை, 168 கிரீன்பாங்க் வீதி, நேப்பியன்
Knoxdale public school, 168 Greenbank road, Nepean, ON K2H 5V2 (வரை படம்)
சனிக்கிழமைகளில் தமிழ் வகுப்புகள் நடைபெறும்போது தொடர்பு கொள்ள: (613) 828-0010
கோடை வகுப்புகள்
வகுப்பு நேரம்: கோடையில் யூலை மாதத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:30 - 12:00இடம்: யூன் மாதத்தில் தீர்மானிக்கப்படும்
உயர்தர வகுப்புகள் / Credit Course
உயர்தர மாணவர்களுக்கான உயர்தர தமிழ் வகுப்புகள் (credit course)வகுப்பு நேரம்: செப்டம்பர் 23 முதல் டிசம்பர் 16 வரை செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் பி.ப. 6:00 முதல் 10:00 வரை.
இடம்: The Adult High School, 300 Rochester Street, Ottawa, Ontario, K1R 7N4. (வரை படம்)
மேலதிக விபரங்களுக்கு, மின்னஞ்சல்: info@ottawatamilschool.org