tamilSchoolImage

பள்ளிக் கூடம்
SCHOOL தமிழ் கற்க/Learn Tamil கணினியில் தமிழ்/Tamil in PC

கன்றுக் குட்டி
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி. 

நாவால் நக்குது வெள்ளைப்பசு - பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி

முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு - மடி
முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி

						- கவிமணி தேசிக விநாயகம்
புதிய தகவல்கள்
Latest News
2011/2012 கலண்டர்
Calendar
விடுமுறை நாட்கள்
No class