|
|
|||||||||||
| பள்ளிக் கூடம் |
ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவன் நிறைய வாத்துக்கள் வளர்த்து வந்தான். அந்த வாத்துக்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் ஒரு தங்க முட்டை இட்டு வந்தது. அந்த விவசாயி அந்த தங்க முட்டைகளை விற்றுப் பணக்காரன் ஆனான். அவன் ஒரு பேராசை பிடித்தவன். வாத்து ஒவ்வொரு நாளும் ஒரு தங்க முட்டைதானே இடுகிறது. இதற்காக ஒவ்வொரு நாளாகக் காத்திருக்க வேண்டுமா? வாத்தின் வயிற்றுக்குள் தான் நிறைய தங்க முட்டைகள் இருக்கும். எல்லாவற்றையும் ஒன்றாக எடுத்து விற்றால், ஒரே நாளில் மிகப் பெரிய பணக்காரன் ஆகலாம் என நினைத்தான். அதனால் விவசாயி எல்லா தங்க முட்டைகளையும் ஒன்றாக எடுப்பதற்காக, ஒரு கத்தியை எடுத்து வாத்தின் வயிற்றைக் கீறினான். வாத்து இறந்து விட்டது. அதன் வயிற்றினுள் ஒரே ஒரு தங்க முட்டை மாத்திரம் இருந்தது. வாத்து இறந்ததினால் ஒவ்வொரு நாளும் கிடைத்து வந்த தங்க முட்டையும் அவனுக்கு கிடைக்காமல் போய்விட்டது. விவசாயி கவலைப்பட்டு வருந்தினான். இப்போது வருந்தி என்ன பிரயோசனம். இறந்த வாத்து இறந்தது தான். பேராசை பெரும் நட்டம் |
||||||||||
| இல்லம் | |||||||||||
| அறிவிப்புகள் | |||||||||||
| பள்ளி வாழ்த்துப் பாடல் | |||||||||||
| உசாத்துணை | |||||||||||
| உயர் கல்வி | |||||||||||
| கற்க தமிழ் | |||||||||||
| அரிச்சுவடி | |||||||||||
| குட்டிக் கதைகள் | |||||||||||
| குழந்தைப் பாடல்கள் | |||||||||||
| நீதி நெறிகள் | |||||||||||
| தாலாட்டு | |||||||||||
| School | |||||||||||
| Home | |||||||||||
| Announcements | |||||||||||
| Tamil Credit Course | |||||||||||
| Useful Links | |||||||||||
| 2009/2010 கலண்டர் | |||||||||||
| முதல் நாள்: செப்.12, 2009 | |||||||||||
| இறுதி நாள்: யூன் 19, 2010 | |||||||||||
| ஆண்டு விழா: யூன் 12, 2010 | |||||||||||
| விடுமுறை நாட்கள் | |||||||||||
| அக்டோபர் 10, 2009 | |||||||||||
| அக்டோபர் 31, 2009 | |||||||||||
| டிசம்பர் 26, 2009 | |||||||||||
| சனவரி 2, 2010 | |||||||||||
| செப்டம்பர் 13, 2010 | |||||||||||
| மார்ச் 20, 2010 | |||||||||||
| ஏப்ரல் 3, 2010 | |||||||||||
| மே 22, 2010 | |||||||||||
|
| |||||||||||
| e-mail: info@ottawatamilschool.org Ottawa, Canada www.ottawatamilschool.org | |||||||||||