tamilSchoolImage
    

ஆத்தி சூடி
அறம் செய விரும்பு       - நல்வாழ்வு நடத்த ஆசை கொள்.  
ஆறுவது சினம்           - தணிய வேண்டியது கோபம்.  
இயல்வது கரவேல்        - நம்மால் முடிந்ததை ஒளியாமல் செய்ய வேண்டும்.
ஈவது விலக்கேல்          - பிறருக்குக் கொடுப்பதைத் தடுக்கக் கூடாது.
உடையது விளம்பேல்      - நம் திறமைகளை வெளியே சொல்லக் கூடாது. 
ஊக்கமது கைவிடேல் 	- ஒரு காரியம் செய்யும் போது தடை ஏற்படுமானால்
						அதைக் கண்டு மனம் தளரக் கூடாது.  
எண் எழுத்து இகழேல் 	- கணிதம் இலக்கியம் என்பவற்றை இகழ்ந்து 
						பேசக் கூடாது.  
ஏற்பது இகழ்ச்சி		- யாசிப்பது இழிவு தருவதாகும்.
ஐயம் இட்டு உண் 		- பிச்சை இட்டு பின் உண்ண வேண்டும்.
ஒப்புர வொழுகு 		- உலகத்தின் போக்கு எப்படி என்று உணர்ந்து 
						அதன் படி நடக்க வேண்டும்.
ஓதுவது ஒழியேல் 		- படிப்பதை விடக் கூடாது.
ஔவியம் பேசேல் 	- பொறாமை கொண்டு பேசக் கூடாது.
அ·கம் சுருக்கேல் 	- தானிய விளைச்சலை குறைக்கக் கூடாது.

							- ஔவையார்
    
e-mail: info@ottawatamilschool.org           Ottawa, Canada          www.ottawatamilschool.org