tamilSchoolImage
    

வான வில்
நிலா நிலா இங்கே வா
நீல வானை எட்டிப் பார்
தூறல் போடும் வானமதில்
தோன்றும் வான வில்லைப் பார்
 
எழுவான் கதிரோன் வெள்ளொளியில்
ஏழு நிறங்கள் தெரியுது பார்
ஏழு நிறங்கள் என்னவென்று
சொல்வேன் அதனைக் கேட்டுப் பார்
 
பச்சை மஞ்சள் கரு நீலம்
சேர்ந்து சிவந்த மஞ்சள் பார்
சிவப்பு நீல நிறங்களுடன்
சேர்ந்து விளங்கும் ஊதா பார்
 
படித்த பாடம் வகுப்பறையில்
சொல்லும் உண்மை இங்கே பார்
வர்ண மாயை காட்டு மந்த
விந்தை அழகை நேரிற் பார்
    
e-mail: info@ottawatamilschool.org           Ottawa, Canada          www.ottawatamilschool.org