Insert Logo Here

Search only in Ottawa Tamil School

இலக்கியத் தேடல்

ஆண்டு விழா காணொளிகள்

புதிய தகவல்கள்
Latest News


Tamil School App தமிழ்ப்பள்ளிச் செயலி

கோடைவகுப்பு 2024 Summer class   July 2 - 26    நேரடியாகவும், இணைய வழியாகவும் @ பார்கவன் & கனாட்டா
In person and online, in Barrhaven & Kanata
Info/registration பதிவு செய்க


தமிழுக்குப் பெருமை செய்த எண்ணிறந்தவர்களிற் சிலரின் விம்பங்கள்
சிங்கமும் முயலும்

ஒரு காட்டில் ஒரு சிங்கம் இருந்தது. அந்தச் சிங்கம் காட்டில் உள்ள மிருகங்களை எந்த நேரமும் துரத்திப் பிடித்து அவற்றைக் கொன்று தின்று கொண்டேயிருந்தது. இதனால் மிருகங்கள் பயந்து நடுங்கி எப்பொழுதும் கவலையுடன் இருந்தன.

இதற்கு என்ன செய்யலாம் என்று, ஒரு நாள் எல்லா மிருகங்களும் ஒன்று கூடி யோசித்தன. சிங்கத்துடன் பேசிப் பார்ப்போம் என்று ஒரு முயல் யோசனை கூறியது. சிங்கத்திடம் எப்படிச் செல்வது, யார் செல்வது என்று, ஆரம்பத்தில் தயங்கிய மிருகங்கள் பின்பு எல்லா மிருகங்களும் சேர்ந்து செல்லலாம் என்ற யோசனக்குச் சம்மதித்தன. பின்னர் எல்லாம் கூட்டமாகச் சிங்கத்திடம் சென்றன.

எல்லா மிருகங்களையும் ஒன்றாகக் கண்ட சிங்கத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. ஆச்சரியத்தை அடக்கிக் கொண்டு, இங்கே ஏன் வந்தீர்கள் என்று கோபமாகக் கேட்டது. இதற்கு எல்லா மிருகங்களும், தாங்கள் சிங்கத்தினால் படும் துன்பங்களைச் சொல்லித் தங்களைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டன. அதற்குச் சிங்கம், தனக்குச் சாப்பாட்டுக்காகத் தான் மிருகங்களைக் கொல்வதாகச் சொன்னது. இதற்கு ஒரு தீர்வாக, ஒவ்வொரு நாளும் ஒரு மிருகத்தை தாங்களே சிங்கத்தின் சாப்பாட்டு நேரத்திற்கு அனுப்பி வைப்பதாகவும், தங்களைத் துன்பப்படுத்த வேண்டாம் என்றும் எல்லா மிருகங்களும் சேர்ந்து கூறின. சிங்கமும் அதற்கு சம்மதித்தது.

மிருகங்களும் சிங்கத்திற்கு கூறியது போல் ஒவ்வொரு நாளும் தவறாமல் சிங்கத்தின் உணவு வேளைக்கு ஒவ்வொரு மிருகத்தை அனுப்பிக் கொண்டிருந்தன. ஒருநாள் முயல் போகும் முறை வந்தது. முயல் சிங்கத்தின் உணவு வேளைக்கு போகாமல் கொஞ்சம் பிந்திப் போனது. முயலைக் கண்டவுடன் பசியுடன் இருந்த சிங்கத்திற்கு கோபம் வந்தது. "ஏன் பிந்தி வந்தாய்?" என்று கோபத்துடன் முயலைப் பிடிக்கப் போனது. முயல், "கொஞ்சம் பொறுங்கள். நான் வரும் வழியில் வேறு ஒரு சிங்கத்தைக் கண்டேன். அது என்னைப் பிடிக்கப் பார்த்தது. நான் தப்பி ஒளித்துக் கொண்டு வருகிறேன்" என்றது. இதைக் கேட்டவுடன் பசியுடன் இருந்த சிங்கத்திற்கு இன்னும் கூடக் கோபம் வந்தது. "இன்னொரு சிங்கமா? எனக்கு காட்டு" என்று முயலிடம் சிங்கம் சொன்னது.

முயல் சிங்கத்தை ஒரு பாழடைந்த கிணற்றிற்கு அழைத்துச் சென்று அந்தக் கிணற்றுக்குள்ளே தான் சிங்கம் இருப்பதாகச் சொன்னது. சிங்கம் கிணற்றினுள் எட்டிப் பார்த்தது. சிங்கத்தின் உருவம் கிணற்றில் உள்ள தண்ணீரில் தெரிந்தது. சிங்கம் அதை உண்மையிலேயே இன்னொரு சிங்கம் என்று நினைத்தது. அதனுடன் சண்டை பிடிப்பதற்காக கிணற்றினுள் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கி அந்த மொக்குச் சிங்கம் இறந்து போனது. முயல் மற்ற மிருகங்களுக்குப் போய் இதைச் சொன்னது. இனி சிங்கத்தின் தொல்லை இல்லை என்று எல்லா மிருகங்களும் மகிழ்ச்சி அடைந்தன.

ஆத்திரக் காரனுக்குப் புத்தி மட்டு